/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூத்த சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
/
மூத்த சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
ADDED : மே 13, 2024 12:45 AM
சென்னை:சென்னையில் உள்ள மூத்த சிவில் நீதிபதிகள் ஏழு பேர் உட்பட மொத்தம் 13 பேர், பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வேல்ராஜ், தாம்பரம் சப் ஜட்ஜ் ஆகவும், எழும்பூர் மாஜிஸ்திரேட் செல்லபாண்டியன், மோசடி தொடர்பான மத்திய குற்றப் பிரிவு வழக்குகளை விசாரிக்கும் எழும்பூர் மாஜிஸ்திரேட் ஆகவும், சிறுவழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி சுஜாதா, விபத்து வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கும், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல், சிறுவழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி சுரேஷ், எழும்பூர் மாஜிஸ்திரேட்டாகவும், சிறுவழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன், ஆறாவது நீதிமன்றத்துக்கும், விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துமுருகன், ஐந்தாவது நீதிபதியாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும், திருப்பூர், திண்டுக்கல், சேலம் ஆகிய இடங்களை சேர்ந்த மூத்த சிவில் நீதிபதிகள் என, மொத்த 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.