/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் நிலையத்தில் டிக்கெட் மையம் இடமாற்றம்
/
எழும்பூர் நிலையத்தில் டிக்கெட் மையம் இடமாற்றம்
ADDED : மே 17, 2024 12:30 AM
சென்னை, சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி காரணமாக, எழும்பூர் ரயில் நிலைய டிக்கெட் பதிவு மையம், பூந்தமல்லி சாலை ஒட்டி ஆர்.பி.எப்., அலுவலக வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தை 735 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கியது. இந்தப் பணி, தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் காரணமாக, டிக்கெட் முன்பதிவு மையம், மின்சார ரயில் டிக்கெட் கவுன்டர்கள், பூந்தமல்லி சாலையை ஒட்டியுள்ள எழும்பூர் ஆர்.பி.எப்., அலுவலகம் வளாகத்தில் தற்காலிகமாக இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தலா மூன்று முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் கவுண்டர்கள் செயல்படுகின்றன என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

