ADDED : ஏப் 16, 2024 12:09 AM
அ நிறம் | அளவு
ஆண்டுதோறும், திருநங்கையர் தினமான ஏப்., 15ல், மக்கள் நலன் சார்ந்த சேவைகளை செய்வோம். இந்தாண்டு, வரும் 19ல் நடக்கும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம்.
இம்முறை 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் கமிஷனுடன் இணைந்து, விழிப்புணர்வு குறும்படத்திற்கும் பங்காற்றியுள்ளோம். ஒவ்வொருவரும் தவறாமல், சிரமம் பார்க்காமல் ஓட்டளிக்க வேண்டும் என, சகோதரன் அமைப்பைச் சேர்ந்த திருநங்கை சுதா தெரிவித்துள்ளார்.
- -நமது நிருபர்- -
