/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரியில் கால்நடை கழிவுகள் அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்
/
ஏரியில் கால்நடை கழிவுகள் அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்
ஏரியில் கால்நடை கழிவுகள் அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்
ஏரியில் கால்நடை கழிவுகள் அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்
ADDED : ஜூலை 06, 2024 12:32 AM
சென்னை, தாம்பரம் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமான மாடம்பாக்கம் ஏரியில், கழிவுநீர் கலப்பதை தடுக்க நீர்வளத் துறை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏரியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதாலும், குப்பை கொட்டப்படுவதாலும் ஏரி நீர் மாசடைந்து வருகிறது.
இதை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியில் உள்ள தேனுபுரிஹவுசிங் காலனி, சீதாலட்சுமி நகர் நலச் சங்கம் ஆகியவை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்கை தீர்ப்பாயம் விசாரித்து வரும் நிலையில், மாடம்பாக்கம் ஏரியில் கால்நடை கழிவுகள் கொட்டப்படுவதாகவும், குடியிருப்பு பகுதிகளிலிருந்து கழிவுநீர் விடப்படுவதாகவும், மே 27ம் தேதி நாளிதழ்களில் செய்தி வெளியானது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், நாளிதழ்களில் வெளியான செய்தியில் இருந்து மாடம்பாக்கம் ஏரி மாசடைந்து வருவது தெரிகிறது.
இது தொடர்பாக ஆய்வு செய்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.