/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திரிபுரா வாலிபர்களுக்கு கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை
/
திரிபுரா வாலிபர்களுக்கு கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை
திரிபுரா வாலிபர்களுக்கு கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை
திரிபுரா வாலிபர்களுக்கு கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை
ADDED : மே 18, 2024 12:18 AM
சென்னை, சென்னை, சோழிங்கநல்லுார் பழைய கடற்கரை சாலை பொன்னியம்மன் கோவில் அருகே, மூன்று பேர் கஞ்சா விற்பதாக, 2021 நவ.,15ல் செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த நபர்களை பிடித்தனர். பின், அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் மேற்கு திரிபுரா மாநிலம் சோனாபூரைச் சேர்ந்தவர்களான மாமன் மியா, 22, ஜாகிர் ஹொசைன், 21, சுமன் அக்தர், 21, என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் அளித்த தகவலின்படி, வீட்டில் மறைத்து வைத்திருந்த 24 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
வழக்கில் தொடர்புடைய சுமன் அக்தர் தலைமறைவானதால், மற்ற இருவர் மீதான வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான 2வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.நந்தகோபால் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ''குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபித்துள்ளது. எனவே, குற்றம்சாட்டப்பட்ட மாமன் மியா, ஜாகிர் ஹொசைன் ஆகிய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது,'' என தீர்ப்பளித்தார்.

