தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ த.வெ.க., நிர்வாகியின் ஆட்டோவுக்கு தீ வைப்பு

த.வெ.க., நிர்வாகியின் ஆட்டோவுக்கு தீ வைப்பு

த.வெ.க., நிர்வாகியின் ஆட்டோவுக்கு தீ வைப்பு


ADDED : மே 07, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புழல்: த.வெ.க., நிர்வாகியின் ஆட்டோவுக்கு தீ வைத்த மர்மநபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

புழல் அடுத்த விநாயகபுரம், நேரு நகரைச் சேர்ந்தவர் சந்துரு, 28; த.வெ.க., நிர்வாகி. இவர், கல்லுாரியில் படித்துக் கொண்டே ஓய்வு நேரத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை வீட்டருகே நிறுத்தி, துாங்க சென்றார். நள்ளிரவு ஆட்டோ தீப்பிடித்து எரிவதாக சந்துருவுக்கு, பகுதிமக்கள் தகவல் அளித்தனர். வீட்டில் உள்ள தண்ணீரை வைத்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் ஆட்டோவின் சீட், கவர் உள்ளிட்டவை தீப்பிடித்து எரிந்தன.

ஆட்டோவுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என, புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us