ADDED : ஆக 07, 2026 09:22 PM
சென்னை, ஆக. 8–
அரசு மருத்துவமனை இலவச செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள், தொடர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பின.
எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 2024 ஜூன் 7ல், 6.97 கோடி ரூபாய் மதிப்பில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டது.
இங்கு, 2025 டிசம்பரில், ஐந்து ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்த 32 வயது பெண்ணுக்கு, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம், ஜூன் 23ல், அறுவை சிகிச்சையில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
ஆனால், 31 வாரத்தில் பிறந்ததால், குறைந்த எடையுடன் இருந்த குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டன.
தற்போது பெண் குழந்தை 1.6 கிலோ; ஆண் குழந்தை 1.7 கிலோ எடையில் ஆரோக்கியமாக இருப்பதால், பெற்றோருடன் வீடு திரும்பின.
இதே மையத்தில் பிறந்த மற்றொரு ஆண் குழந்தையும், விரைவில் வீடு திரும்பும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
