/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் சித்தப்பாவை தாக்கிய இருவர் கைது
/
போதையில் சித்தப்பாவை தாக்கிய இருவர் கைது
ADDED : ஏப் 06, 2024 12:25 AM
திருநின்றவூர், ஆவடி அடுத்த திருநின்றவூர், நத்தமேடு, திலகர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 33; கூலித்தொழிலாளி.
இவர், நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, அருகில் குடியிருக்கும் அவரது அண்ணன் மகன்களான சண்முகம், 26, மற்றும் மணி, 21, இருவரும், மது போதையில் சரவணனை கிண்டல் செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சரவணன், மணியை தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த இருவரும் சரவணனை கல் மற்றும் கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரது தலையில் எட்டு தையல் போடப்பட்டது.
இது குறித்து விசாரித்த திருநின்றவூர் போலீசார், சண்முகம் மற்றும் மணி இருவரையும் கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

