/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன்கள் சப்ளை செய்வதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி: இருவர் கைது
/
மீன்கள் சப்ளை செய்வதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி: இருவர் கைது
மீன்கள் சப்ளை செய்வதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி: இருவர் கைது
மீன்கள் சப்ளை செய்வதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி: இருவர் கைது
ADDED : மார் 11, 2025 12:58 AM

காசிமேடு, கரூர் மாவட்டம், சேலம் பைபாஸ் சாலையைச் சேர்ந்தவர் நந்தகுமார், 25. இவர், அதே பகுதியில் செயல்படும் வெளிநாட்டிற்கு மீன்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.
இவர், தங்கள் நிறுவனத்திற்கு வெள்ளை வவ்வால் மீன்கள் மொத்தமாக தேவைப்படுவதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன் வியாபாரம் செய்து வரும் அரவிந்த், 31, தமிழ்மணி, 31, ஆகியோரிடமும், மீன்கள் சப்ளை செய்வதற்காக பேசினார்.
கடந்த 2022 நவ., 15ம் தேதி துவங்கி, நிறுவனம் மூலம் பல தவணைகளாக மொத்தமாக, 37.74 லட்சம் ரூபாயை, அரவிந்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், மீன்களை சப்ளை செய்யாமல் ஏமாற்றினர்.
கொடுத்த பணத்தை நந்தகுமார் திருப்பி கேட்டபோது, 10 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளனர். மீதி 27.74 லட்சம் ரூபாய் தரமுடியாது எனக் கூறி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து, 2022 டிச., மாதம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், நந்தகுமார் ஐகோர்டில் மனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த மார்ச் 6ம் தேதி, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மீன்கள் ஏற்றுமதி நிறுவனத்தில் பணம் பெற்று ஏமாற்றிய, காசிமேடு, பவர்குப்பம், 9வது பிளாக்கைச் சேர்ந்த அரவிந்த், 31, ராயபுரம், சிங்காரவேலர் நகர், 3வது தெருவை சேர்ந்த தமிழ்மணி, 31, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.