/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பீஹார் வாலிபர்கள் மூன்று பேரை கடத்தி பணம் பறித்த இருவர் கைது
/
பீஹார் வாலிபர்கள் மூன்று பேரை கடத்தி பணம் பறித்த இருவர் கைது
பீஹார் வாலிபர்கள் மூன்று பேரை கடத்தி பணம் பறித்த இருவர் கைது
பீஹார் வாலிபர்கள் மூன்று பேரை கடத்தி பணம் பறித்த இருவர் கைது
ADDED : ஜூன் 02, 2024 12:18 AM
எழும்பூர், பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் நவுசந்த் ஆலம், 23, முந்தன் குமார்,23, இவர்கள் இருவரும், திருச்செந்துார், உடன்குடியில் உள்ள பவர் பிளாண்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் கம்பெனியில் வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டது. அதனால் இவர்கள் இருவரும், தங்களின் சொந்த ஊரான பீஹாருக்கு சென்றனர்.
அங்குள்ள நண்பர்கள் அமர்குமார் மாஜி,30, அசார்பிக் குமார் மாஜி, 26, முகமது மன்சூரி, 23 ஆகியோரை வேலைக்காக அழைத்துக்கொண்டு, ரயிலில் நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரலுக்கு வந்தனர். ஐந்து பேரும் உடன்குடிக்கு செல்வதற்காக ஆட்டோவில் எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளனர்.
அப்போது நவுசந்த் ஆலம், முந்தன் குமார் ஆகியோர் சாப்பிடச் சென்று திரும்பிய போது, மற்ற மூன்று பேரையும் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
ஆட்டோ ஓட்டுனர்கள் இருவர், மூன்று பேரையும் கடத்தியது தெரிந்தது. உடனடியாக எழும்பூர் போலீசாருக்கு நவுசந்த் ஆலம் புகார் அளித்தார்.
எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். இதற்கிடையே, மூவரிடம், 30,000 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர்கள் 15,000 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்த மொபைல்போன்களை பறித்துக்கொண்டு மூவரையும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு, ஆட்டோ ஓட்டுனர்கள் இருவரும் தப்பினர்.
போலீசார் அவர்களை மீட்டனர். தீவிர விசாரணை நடத்தி, பீஹார் நபர்களை கடத்திய மணலி, மாத்துாரைச் சேர்ந்த முருகன்,30, அயனாவரம், பழனியப்பா தெருவைச் சேர்ந்த குரு,22 ஆகிய இரு ஆட்டோ ஓட்டுனர்களை கைது செய்தனர். சூளையைச் சேர்ந்த விஜய்,23 என்பவரை தேடி வருகின்றனர்.