/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி கொலைக்கு பழி தீர்ப்போம் 'போஸ்டர்' ஒட்டிய இருவர் கைது
/
ரவுடி கொலைக்கு பழி தீர்ப்போம் 'போஸ்டர்' ஒட்டிய இருவர் கைது
ரவுடி கொலைக்கு பழி தீர்ப்போம் 'போஸ்டர்' ஒட்டிய இருவர் கைது
ரவுடி கொலைக்கு பழி தீர்ப்போம் 'போஸ்டர்' ஒட்டிய இருவர் கைது
ADDED : மார் 13, 2025 12:17 AM
அண்ணா நகர், அண்ணா நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ரவுடி ராபர்ட், 24, என்பவரை, கடந்த 26ம் தேதி, முன்விரோதம் காரணமாக, வெட்டி கொலை செய்தனர்.
வழக்கில், அயனாவரத்தைச் சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை செய்யப்பட்ட ராபர்ட்டின் 12வது நினைவு நாள், நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில், ராபர்ட் உடன் வசித்த திருநங்கை சஞ்சனா மற்றும் ராபர்ட் தம்பி மோசஸ் இருவரும், நினைவு நாள் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
அதில், கணவரின் கொலைக்கு பழித்தீர்க்கும் வாசகத்துடன் வன்முறையை துாண்டும் வகையில் இருந்தாக கூறப்படுகிறது.
சம்பவ அறிந்து வந்த அண்ணா நகர் போலீசார் இருவரிடமும் விசாரித்தபோது, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் திருநங்கை சஞ்சனா, மோசஸ் ஆகிய இருவரையும், கைது செய்து சிறையில் அடைத்தனர்.