/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை கத்தியால் குத்திய இருவர் கைது
/
வாலிபரை கத்தியால் குத்திய இருவர் கைது
ADDED : மார் 03, 2025 12:52 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, மோதிலால் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன், 20. இவர், நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் பூட்டி இருந்த அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்ளே அமர்ந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, கத்தியுடன் அங்கு வந்த மர்ம கும்பல், விக்னேஸ்வரணை கை, தலையில் சரமாரியாக வெட்டி தப்பினர். பலத்த காயமடைந்த அவர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், புளியந்தோப்பு, சிவராஜபுரத்தைச் சேர்ந்த இளஞ்செழியன், 21, மற்றும் பி.கே. காலனியைச் சேர்ந்த பார்த்திபன், 22 ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
முன்பகை காரணமாக சம்பவம் நடந்தது தெரிந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடுகின்றனர்.