ADDED : ஜூலை 31, 2026 10:30 PM
அ நிறம் | அளவு
திருவொற்றியூர்: திருவொற்றியூர், ராஜாஜி நகரைச் சேர்ந்த ரஹமத்துல்லா, 21, செட்டி தெருவில் நிறுத்தியிருந்த ‘யமஹா ஆர் 15’ ரக பைக் திருடுபோனது. இதை திருடிய மதுரவாயலைச் சேர்ந்த ராகுல், 21, ஹரி விக்னேஷ், 22, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
சிந்தாதிரிப்பேட்டையில், மெக்கானிக் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த சதிஷ்குமார் என்பவரின் ‘மகேந்திரா பொலிரோ’ காரை திருடிய மூசா ஷரீர், 56, என்பவர் கைது செய்யப்பட்டார்.
அரும்பாக்கத்தைச் சேர்ந்த விமலா, 55, என்பவர் வீட்டில் 7,000 ரூபாய் திருடிய 17 வயது சிறுவனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
