ADDED : ஜூலை 30, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
படப்பை: படப்பை அருகே காவனுார் கிராமத்தில் சுஜித், 23, என்பவர் வீட்டின் முன்பும், முத்துமாரியம்மன் கோவில் அருகேயும், ஒரே பைக்கில் வந்த இருவர், கடந்த 28ல் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க வைத்தனர். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
படப்பை போலீசார் விசாரணையில், காவனுாரில் நடந்த இறுதிச்சடங்கின்போது, சுஜித் மற்றும் ஸ்ரீநாத், 22, இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டது தெரியவந்தது.
இதனால், சுஜித்தை அச்சுறுத்த ஸ்ரீநாத், அவரது நண்பர் தீபக், 22, ஆகியோர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தலைமறைவாகினர்.
இந்நிலையில் ஸ்ரீநாத், தீபக் ஆகிய இருவரும், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர். இதையடுத்து இருவரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.
