/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை போக்சோவில் சிறுவர்கள் இருவர் கைது
/
சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை போக்சோவில் சிறுவர்கள் இருவர் கைது
சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை போக்சோவில் சிறுவர்கள் இருவர் கைது
சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை போக்சோவில் சிறுவர்கள் இருவர் கைது
ADDED : மே 29, 2024 12:17 AM
வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தில், 11 வயது சிறுமிக்கு, ஆறு மாதமாக பல விதங்களால் பாலியல் தொல்லை கொடுத்த, பெரியப்பா மகன், எதிர்வீட்டு சிறுவன், டெய்லர் ஆகியோர் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டனர்.
வில்லிவாக்கம் காவல் மாவட்டத்தை சேர்ந்த, 32 வயது பெயின்டருக்கு, 28 வயதில் வீட்டு வேலை செய்யும் மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில், 11 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கிறார்.
தம்பதி இருவருக்கும், வீட்டில் மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் பிள்ளைகளை சரவர கவனிக்காமல் இருந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன், திருவேற்காடு பகுதியில் இருந்து, தாய்வழி பாட்டியான 45 வயது பெண், பேரப்பிள்ளைகளை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, 11 வயது சிறுமி கால்கள், அடிவயிறு மற்றும் பெண் உறுப்பில் வலிப்பதாக, பாட்டியிடம் கூறி அழுதுள்ளார்.
சிறுமியிடம் பாட்டி விசாரித்த போது, உறவினரின் மகன் உள்ளிட்ட சிலர் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பெற்றோரிடம் தெரிவித்ததும், மதுவிற்கு அடிமையானவர்கள் இதை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என, கூறி சிறுமி அழுதுள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, நேற்று வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்த போது, வீட்டின் அருகில் வசிக்கும் பெரியப்பாவின், 15 வயது மகன், சிறுமியிடம் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார்.
அதையறிந்த, எதிர்வீட்டு 16 வயது சிறுவனும், சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் உறுதியானது.
அதே போல், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், அதேபகுதியில் உள்ள டெய்லர் குமார், 41 என்பவரும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. மூவர் மீதும் போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்து, குமாரை சிறையிலும், சிறுவர்களை கெல்லீசில் உள்ள சிறார் மையத்திலும் சேர்த்தனர்.
சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.