/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை வெட்டிய மேலும் 2 பேர் கைது
/
வாலிபரை வெட்டிய மேலும் 2 பேர் கைது
ADDED : மார் 09, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, மோதிலால் தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 20, என்பவரை, கடந்த 2ம் தேதி 10 பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து, இளஞ்செழியன், பார்த்திபன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சாரதி என்கிற 'நொள்ளை' சாரதி, 22, 'கஞ்சா' மணி, 23, ஆகிய இருவரை, நேற்று பேசின் பிரிட்ஜ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.