/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஐ.,யிடம் 'வாக்கி டாக்கி' பறித்து உடைத்த நேபாளம் வாலிபர் உட்பட இருவர் சிக்கினர்
/
எஸ்.ஐ.,யிடம் 'வாக்கி டாக்கி' பறித்து உடைத்த நேபாளம் வாலிபர் உட்பட இருவர் சிக்கினர்
எஸ்.ஐ.,யிடம் 'வாக்கி டாக்கி' பறித்து உடைத்த நேபாளம் வாலிபர் உட்பட இருவர் சிக்கினர்
எஸ்.ஐ.,யிடம் 'வாக்கி டாக்கி' பறித்து உடைத்த நேபாளம் வாலிபர் உட்பட இருவர் சிக்கினர்
ADDED : மார் 05, 2025 03:16 AM
திருமங்கலம்:திருமங்கலம் போக்குவரத்து போலீசில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் செந்தில்குமார், 48. இவர், நேற்று முன்தினம் முற்பகல், 11:30 மணியளவில், 100 அடி சாலை, அண்ணா நகர் மேற்கு பேருந்து நிலையம் அருகில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, திருமங்கலத்தில் இருந்து பாடியை நோக்கி, 'ஹெல்மெட்' அணியாமல் இருவர், 'ஹீரோ ஸ்ப்ளெண்டர்' இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தனர்.
அந்த வாகனத்தை, எஸ்.ஐ., செந்தில்குமார் மடக்கியபோது, அவரது கையில் இருந்த வாக்கி டாக்கியை, அதே வாகனத்தில் வந்த நபர் பறித்து, வேகமாக பறந்தனர்.
செந்தில்குமார் ஆட்டோவில் அவர்களை பின்தொடர்ந்தார். ஆனால், அவர்களை பிடிக்க முடியவில்லை.
புகாரின் படி திருமங்கலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் விசாரித்து, வாக்கி டாக்கியுடன் தப்பிய இருவரையும், திருமங்கலம் 15வது சாலையில், நேற்று மாலை கைது செய்தனர்.
விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாசுதேவன், 30, மற்றும் நேபாளம் நாட்டைச் சேர்ந்த தினேஷ், 35, என்பது தெரிய வந்தது.
இருவரும், அதே பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் டைல்ஸ் ஒட்டும் பணி செய்வதும் தெரிய வந்தது.
சம்பவத்தன்று இரவு பணி பார்த்துவிட்டு, மது போதையில் பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் சுற்றியபோது போலீஸ் பிடிக்க முயன்றதால், விளையாட்டுத்தனமாக போதையில் பறித்து சென்றதாக கூறினர்.
மேலும், பயத்தில் வாக்கி டாக்கியை சாலையில் வீசியுள்ளனர். உடைந்து சிதறிய வாக்கி டாக்கியின் பாகங்களை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.