/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது போதையில் விபரீதம் இருவர் உயிரிழப்பு
/
மது போதையில் விபரீதம் இருவர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 02, 2024 12:54 AM
ஆவடி, திருநின்றவூர், நடுக்குத்தகை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் விமல்குமார், 28; பெயின்டர். இவரது மனைவி பவித்ரா, 26. ஒரு மகள், மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த விமல் குமார், பாலவேடு ஏரிக்கரைக்கு குளிக்க சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், நேற்று காலை அவரது உடல் கரை ஒதுங்கியது. திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக், 23; கொத்தனார். இவர், சென்னை அரும்பாக்கம், கோலப் பெருமாள் தெருவில் நடக்கும் புது கட்டட கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு 10:00 மணிக்கு, நான்காவது மாடியில் அசோக் மது அருந்தியுள்ளார். பின், கீழே இறங்க முயலும்போது, கால் இடறி கீழே விழுந்து உயிரிழந்தார். அரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் படுகாயம்
அசோக் நகர் 89வது தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ், 28. இவர், சகோதரி ரோஜா வீட்டில் தங்கி ஆட்டோ டிங்கரிங் வேலை செய்து வந்தார். மதுவிற்கு அடிமையான காளிதாஸ், நேற்று முன்தினம் இரவு மது போதையில் இரண்டாவது மாடியில் உள்ள மொட்டை மாடியில் துாங்கினார். இரவு மழை பெய்தபோது, முதல் தளத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல முயன்ற போது தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்தவர், கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.