/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.13 கோடி மனை விற்பனை மோசடி செய்த இருவர் கைது
/
ரூ.1.13 கோடி மனை விற்பனை மோசடி செய்த இருவர் கைது
ADDED : ஏப் 26, 2024 12:15 AM

தாம்பரம், வீட்டு மனை விற்பனை செய்வதாக கூறி, பில்டரிடம், 1.13 கோடி ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை, சிந்தாதிரிபேட்டை, ஐயா முதலி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 56. வீடு கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். பாலசுப்பிரமணியம், கட்டுமான பணிக்காக காலி மனையை தேடிக் கொண்டிருந்தார். அப்போது, தரமணி, காந்தி தெருவை சேர்ந்த தேவராஜ், 42, செல்வகுமார், 43, ஆகிய இருவர், அவரை அணுகினர்.
தாம்பரம் தாலுகா, நன்மங்கலம் கிராமம், முத்தையா நகரில், 2,600 சதுர அடி நிலம் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தனர். பின், ஆள்மாறட்ட நபர் மூலம், போலி ஆவணங்களை தயார் செய்து, பாலசுப்பிரமணியத்திடம், 1.13 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, மற்றொருவருக்கு சொந்தமான நிலத்தினை கூட்டு சேர்ந்து மோசடியாக விற்பனை செய்தனர்.
இதையறிந்த, பாலசுப்பிரமணியம், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரின் படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த தேவராஜ் மற்றும் செல்வகுமாரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

