/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூரை சிமென்ட் பூச்சு விழுந்து இரு பெண்கள் காயம்
/
கூரை சிமென்ட் பூச்சு விழுந்து இரு பெண்கள் காயம்
ADDED : ஆக 07, 2024 12:36 AM
அமைந்தகரை, அரும்பாக்கம், என்.எஸ்.கே., நகர், 8வது தெருவிலுள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசிப்பவர் சந்தோஷ். 40. இவருக்கு திருமணாகி ஆஸ்தா 24, ரோஷ்மா, 19, ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நேற்று காலை, உள் அறையில் இரு மகள்களும் துாங்கியுள்ளனர். அப்போது, காலை 7:00 மணியளவில், வீட்டு கூரையின் சிமென்ட் பூச்சு மட்டும் பெயர்ந்து, பெரும் சத்தத்துடன் இவர்கள் மீது விழுந்துள்ளது.
இதில் இருவருக்கும் தோள்பட்டை, கால் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் பெற்றோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அமைந்தகரை போலீசார் விசாரணையில், வீடு பழைய வீடு என்பதும், சமீபத்தில் வீட்டின் உரிமையாளர் காலி செய்யுமாறு அறிவுறுத்தியதும் தெரிந்தது.