
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி, சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில், தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தார்.
அதில், 'செம்மொழி பூங்காவில் நடைபயிற்சி செய்யும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில், யு - டியூபர் 'பிரியாணி மேன்' என்ற அபிஷேக் ரபி, 29, வீடியோ பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார். புகாரின்படி, அபிஷேக் ரபியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.