/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உம்மிடி பங்காரு - பி.ஜி.ஐ., 'பிளாட்டினம் எவாரா' நகைகள்
/
உம்மிடி பங்காரு - பி.ஜி.ஐ., 'பிளாட்டினம் எவாரா' நகைகள்
உம்மிடி பங்காரு - பி.ஜி.ஐ., 'பிளாட்டினம் எவாரா' நகைகள்
உம்மிடி பங்காரு - பி.ஜி.ஐ., 'பிளாட்டினம் எவாரா' நகைகள்
ADDED : மே 07, 2024 12:10 AM

சென்னை, உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ், தென்னிந்தியாவில் நகை விற்பனையில் முன்னணி நிறுவனமாகும். 124 ஆண்டு பாரம்பரியம் உள்ள இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு வைரம், தங்கம், வெள்ளி நகைகளில் எண்ணற்ற தேர்வுகளை வழங்குகிறது.
இந்நிறுவனம், 'பி.ஜி.ஐ., இந்தியா' எனும் பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல் - இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, 'உம்மிடி பங்காரு' ஜுவல்லர்சின் பிரமாதமான பிளாட்டினம் எவாரா மல்டி சபையர் கலெக் ஷனை வெளியிட்டுள்ளது.
காலத்திற்கு ஏற்றார்போல, புதுவகை நீலமணி கற்களான நகைகள், பிளாட்டினத்தில் அறிமுகம் செய்து, புது மைல் கல்லை எட்டியுள்ளது.
அதோடு, 70 தனித்துவ கலெக் ஷன்கள் உள்ளடக்கிய இந்த தொகுப்பில், நீலம், ஊதா, இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்கள் உட்பட, 5 முதல் 110 கிராம் வரை, பல நிறங்களில் கிடைக்கின்றன. இதில், நடுத்தர வயது மற்றும் இளம் பெண்களை ஈர்க்கும் வடிவமைப்புகள் ஏராளம்.
சென்னையில், அண்ணாசாலை மற்றும் அண்ணாநகரில் உள்ள உம்மிடி பங்காரு கடைகளில் மட்டுமே, இந்த பிரத்யேக நகை தொகுப்புகள் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு, www.vummidi.com, www.vummidisilverware.com ஆகிய இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
இது குறித்து, உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் உம்மிடி கூறுகையில், “பிளாட்டினம் எவாரா மல்டி சபையர் கலெக் ஷன்' அறிமுகப்படுத்த, பி.ஜி.ஐ., உடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
பல வண்ண சபையர்களின் அறிமுகம் நுகர்வோரின் பிளாட்டினம் நகை அனுபவத்திற்கு வரும்போது, நிச்சயமாக ஒரு புதிய பரிணாமத்தைச் சேர்த்துள்ளது. இத்தொகுப்பு பெண்களிடையே பெரும் வரவேற்பை பெறும்,” என்றார்.