/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில் முனைவோர் கடன் முகாமில் ரூ.100 கோடி வழங்கிய யூனியன் வங்கி
/
தொழில் முனைவோர் கடன் முகாமில் ரூ.100 கோடி வழங்கிய யூனியன் வங்கி
தொழில் முனைவோர் கடன் முகாமில் ரூ.100 கோடி வழங்கிய யூனியன் வங்கி
தொழில் முனைவோர் கடன் முகாமில் ரூ.100 கோடி வழங்கிய யூனியன் வங்கி
ADDED : மார் 08, 2025 12:07 AM

தாம்பரம், யூனியன் வங்கி தென் பிராந்தியம் சார்பில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய கிளைகள் வாயிலாக, தாம்பரத்தில் நேற்று, தொழில் முனைவோருக்கான கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில், கடன் பெற்ற 50 பேருக்கு, அதற்கான ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.
வங்கி சார்பில் பல்வேறு இடங்களில், மார்ச் 3 முதல் 7ம் தேதி வரை நடந்த முகாமில், 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளதாக, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
யூனியன் வங்கியின் தலைமை அலுவலக முதன்மை பொது மேலாளர் அருண்குமார் பேசியதாவது:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதிலும் இந்நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நிறுவனங்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், எங்கள் வங்கி கிளைகளில் உள்ளன. வங்கியில், 20,000 ரூபாய் முதல் ஐந்து கோடி ரூபாய் வரை கடன் வழங்குகிறோம். இணையதளம் வாயிலாகவே அனைத்து சேவைகளையும் பெறமுடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.