/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பில்லாத நிழற்குடை விபத்து அபாயத்தில் பயணியர்
/
பராமரிப்பில்லாத நிழற்குடை விபத்து அபாயத்தில் பயணியர்
பராமரிப்பில்லாத நிழற்குடை விபத்து அபாயத்தில் பயணியர்
பராமரிப்பில்லாத நிழற்குடை விபத்து அபாயத்தில் பயணியர்
ADDED : ஜூன் 25, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளை, புளியந்தோப்பு, கே.பி.பார்க் குடியிருப்பு அருகே உள்ள பேருந்து நிழற்குடை, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த நிழற்குடை கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், 'போஸ்டர்' ஒட்ட மட்டுமே பயன்பட்டு வருகிறது. பேருந்து பயணியர் அமர்வதற்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில், சுற்றிலும் குப்பை கொட்டப்பட்டு துர்நாற்றத்துடன் வீசுகிறது.
மேலும், நிழற்குடை உட்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. எனவே, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிழற்குடையை, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.