/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திட்டமிடாமல் தோண்டிய பள்ளத்தால் ராஜலட்சுமி நகரில் பாதை அடைப்பு
/
திட்டமிடாமல் தோண்டிய பள்ளத்தால் ராஜலட்சுமி நகரில் பாதை அடைப்பு
திட்டமிடாமல் தோண்டிய பள்ளத்தால் ராஜலட்சுமி நகரில் பாதை அடைப்பு
திட்டமிடாமல் தோண்டிய பள்ளத்தால் ராஜலட்சுமி நகரில் பாதை அடைப்பு
ADDED : ஆக 05, 2024 01:03 AM

-
மடிப்பாக்கம், ராஜலட்சுமி நகரில் பிரதான சாலைகள், குறுக்கு தெருக்கள் என, 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. அங்கு, 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ராஜலட்சுமி நகருக்குள் நுழைய ராஜராஜேஸ்வரி, 4, 5வது தெரு சாலையே முக்கிய வழித்தடம்.
ராஜலட்சுமி பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, 'மேன்ஹோல்' குழாய் பதிக்கும் பணி நடந்தது.
தாறுமாறாக தோண்டப்பட்ட சாலையை சரியாக மூடாததால், நான்கு மாதங்களாக, போக்குவரத்துக்கு வழியின்றி பகுதிமக்கள் தவித்து வந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டதை அடுத்து, ராஜலட்சுமி நகருக்கு செல்லும் ராஜராஜேஸ்வரி 4வது தெரு சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.ஆனால், 5வது தெருவில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையே தற்போதும் உள்ளது.
இதுகுறித்து பகுதிமக்கள் கூறியதாவது:
ராஜராஜேஸ்வரி 4வது தெருவை தற்காலிகமாக சீரமைத்த நிலையில், மழைநீர் வடிகால் கட்டுவதற்காக, தற்போது பள்ளம் தோண்டியுள்ளனர்.
அதேசமயம், 5வது தெருவையும் சீரமைக்காமல் இருப்பதால், சாலை படுமோசமாக காட்சி அளிக்கிறது.
இரு தெருக்களை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், ராஜலட்சுமி நகருக்கு செல்வதில் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.
மழை பெய்யும் போதெல்லாம், சகதி சாலையாக மாறிவிடுகிறது. நேற்று பெய்த மழையால் சாலையில் நடக்கக்கூட முடியவில்லை.
அதிகாரிகள் மெத்தனம், ஒப்பந்ததாரரின் திட்டமிடாத பணியால் இன்னல்களை சந்தித்து வருகிறோம். 5வது தெரு சாலையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர்