/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் அடிபட்டு உ.பி., வாலிபர் பலி
/
ரயிலில் அடிபட்டு உ.பி., வாலிபர் பலி
ADDED : ஜூலை 06, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், உ.பி., மாநிலம், ராய்பூர், போக்தாப் கிராமத்தைச் சேர்ந்தவர் சுல்தான் அல்மான், 24. மறைமலை நகரில் வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, எல்.சி., கேட் தண்டவாளத்தை ஒட்டி நின்று, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே சுல்தான் அல்மான் இறந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.