/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேட்பாரற்ற வாகனங்கள் அகற்ற வலியுறுத்தல்
/
கேட்பாரற்ற வாகனங்கள் அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஆக 22, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா நகர் மண்டலம், அரும்பாக்கம், அமராவதி நகர் முதல் பிரதான சாலையில், நான்கு ஆண்டுகளாக கேட்பாரற்று, கார் ஒன்று நிற்கிறது. இதை அகற்ற போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல், அண்ணா நகர் மண்டலத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக, சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற வாகனங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து அப்புறப்படுத்த வேண்டும்.