ADDED : ஜூன் 05, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவம், கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சப்பரத்தில் வைகுண்ட பெருமாள் எழுந்தருளினார். மாலை, சிம்ம வாகன உற்சவம் நடந்தது.
நான்காம் நாள் உற்சவமான நேற்று காலை, சேஷ வாகனத்தில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.
இரவு, சந்திர பிரபையில் உலா வந்தார். ஏழாம் நாள் உற்சவமான நாளை மறுநாள் காலை தேரோட்டம் நடக்கிறது.