தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குப்பைமேடான வானகரம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்

குப்பைமேடான வானகரம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்

குப்பைமேடான வானகரம் மாவட்ட நிர்வாகம் அலட்சியம்


ADDED : மே 03, 2024 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2024 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரம்பாக்கம், மாநகராட்சி மற்றும் ஊராட்சி எல்லையில் குவியும் பிளாஸ்டிக் குப்பையை அகற்றுவதுடன், ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை, வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு அருணாச்சலம் நகரில், பாரதி சாலை உள்ளது. இச்சாலை சென்னை மாநகராட்சி மற்றும் வானகரம் ஊராட்சியின் எல்லைப் பகுதியில் உள்ளது.

போரூர், காரம்பாக்கம் பகுதிகளில் இருந்து வானகரம் மற்றும் போரூர் சுங்கச்சாவடி செல்ல, வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.

இச்சாலையில், வானகரம் ஊராட்சி எல்லையில், பிளாஸ்டிக், இதர குப்பை மற்றும் கழிவுகள் குவிக்கப்பட்டு உள்ளன. இந்த குப்பை முறையாக அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.

அத்துடன் பிளாஸ்டிக் குப்பை காற்றில் பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சில சமூக விரோதிகள் பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதால், பகுதி மக்கள் மூச்சு திணறலால் அவதிப்படுகின்றனர்.

மாநகராட்சி, ஊராட்சி எல்லை தவிர, வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல சாலைகளில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளன.

இது, வானகரம் ஊராட்சி எல்லையில், பிளாஸ்டிக் பொருட்கள் தடை முறையாக அமல்படுத்தாமல் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதைக் காட்டுகிறது.

எனவே, குவிக்கப்பட்டுள்ள குப்பையை முறையாக அகற்றவும், ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us