/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
த.மா.கா., வேணுகோபாலை ஆதரித்து வாசன், கூட்டணி கட்சியினர் பிரசாரம்
/
த.மா.கா., வேணுகோபாலை ஆதரித்து வாசன், கூட்டணி கட்சியினர் பிரசாரம்
த.மா.கா., வேணுகோபாலை ஆதரித்து வாசன், கூட்டணி கட்சியினர் பிரசாரம்
த.மா.கா., வேணுகோபாலை ஆதரித்து வாசன், கூட்டணி கட்சியினர் பிரசாரம்
ADDED : ஏப் 17, 2024 12:43 AM

தாம்பரம், தேசிய ஜனநாயக கூட்டணியின், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, த.மா.கா., வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, தாம்பரத்தில் நேற்று மாலை, பிரசார கூட்டம் நடந்தது.
இதில், த.மா.கா., தலைவர் வாசன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்று, வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஓட்டு சேகரித்தனர்.
அப்போது, கூட்டணி கட்சியினர் பேசியதாவது:
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியின் தற்போதைய எம்.பி., டி.ஆர்.பாலு, தொகுதி மக்களுக்காக எதையும் செய்யவில்லை. அவரை, மக்களால் பார்க்க முடியாது.
தாம்பரத்தில் உள்ள தி.மு.க., - எம்.எல்.ஏ.,வே எளிதில் பார்க்க முடியாது. கீழ்மட்டத்தில் இறங்கி, மக்கள் பிரச்னைகளை சந்திக்காதவர். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், தாம்பரத்தில் பிறந்து, வளர்ந்தவர்.
அவரை எந்த நேரத்திலும் எளிதாக பார்த்து, தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
தி.மு.க., சார்பில் போட்டியிடும், டி.ஆர்.பாலுவை, ஏழு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
வாசன் பேசுகையில், ''மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி மக்களுக்கு சேவை செய்ய, த.மா.கா., வேட்பாளர் வேணுகோபாலை வெற்றிபெற செய்து, லோக்சபாவிற்கு அனுப்புங்கள்.
அவர், தொகுதிக்காக பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து, மக்கள் பணி சிறப்பாக செய்வார்,'' என்றார்.

