/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் அமைந்தகரையில் தினமும் நெரிசல்
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் அமைந்தகரையில் தினமும் நெரிசல்
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் அமைந்தகரையில் தினமும் நெரிசல்
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் அமைந்தகரையில் தினமும் நெரிசல்
ADDED : ஜூலை 31, 2024 01:17 AM

அமைந்தகரை, சென்னையின் முக்கிய சாலைகளான பாரிமுனை, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான சாலையாக பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில், பூந்தமல்லி பகுதியில் துவங்கி அரும்பாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் என பிராட்வே வரை, நாள் முழுதும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை நிலவி வருகிறது. குறிப்பாக, அரும்பாக்கம் - கோயம்பேடு, அமைந்தகரை - கீழ்ப்பாக்கம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
நெரிசலை குறைப்பதற்காக, அண்ணா வளைவில் இருந்து நெல்சன் மாணிக்கம் சாலைக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், அமைந்தகரை, அரும்பாக்கம் பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால், நாளுக்கு நாள் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாக, அப்பகுதி வழியாக செல்வோர் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, அண்ணா வளைவு மேம்பாலத்தில் இருந்து வைஷ்ணவ் கல்லுாரி வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையின் ஓரத்தில் ஏராளமான கடைகள், 'ஷேர்' ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட போக்கு வரத்து போலீசார் கண்காணித்து, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.