/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பறித்த வேலுார் பெண் கைது
/
தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பறித்த வேலுார் பெண் கைது
தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பறித்த வேலுார் பெண் கைது
தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பறித்த வேலுார் பெண் கைது
ADDED : மே 29, 2024 12:34 AM

சென்னை, ராயப்பேட்டை, பக்சி அலி தெருவைச் சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன், 33; பர்மா பஜாரில் மொபைல் போன்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து தங்கம், விலை உயர்ந்த மின்னணு பொருட்களை கடத்தி வரும் 'குருவி'யாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், இவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண், ஜாவித் சைபுதீனிடம் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கியுள்ளார்.
கடந்த 17ம் தேதி அந்த பெண், ராயப்பேட்டையில் நடக்கும் இரவு விருந்து நிகழ்ச்சிக்காக, ஜாவித் சைபுதீனை அழைத்துள்ளார். அங்கு சென்ற அவரை, நான்கு பேர் கும்பல் காரில் கடத்தி, கொலை செய்துவிடுவதாக மிரட்டி, 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு விடுவித்தனர்.
சம்பவம் நடந்து எட்டு நாட்கள் கழித்து, கடந்த 25ம் தேதி ஜாவித் சைபுதீன், பட்டினப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். பெண்ணிடம் மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்த போது, வேலுாரை சேர்ந்த சோனியா, 26, என்ற இளம் பெண், நண்பர்களுடன் சேர்ந்து ஜாவித் சைபுதீனை கடத்தி, பணம் பறித்தது தெரிந்தது.
வேலுாரில் பதுங்கி இருந்த சோனியாவை, நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் கைது செய்து, வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.