/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறிய மதுக்கூட உரிமையாளர் கைது
/
விதிமீறிய மதுக்கூட உரிமையாளர் கைது
ADDED : ஆக 27, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
புதுப்பேட்டை, எல்.ஜி., சாலையில் பி.டி.எல்., எனும் பெயரில் மதுக்கூடம் நடத்தி வருபவர் மணி அரோரா, 42. இங்கு, கடந்த 24ம் தேதி இரவு அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி, விதிமீறி மது பிரியர்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அளவுக்கு அதிகமான சத்ததுடன் ஒலிபெருக்கியில் பாட்டு ஒலிக்கச் செய்துள்ளனர். இதுதொடர்பாக, உதவி ஆய்வாளர் நரசிம்மன் கொடுத்த அறிக்கையின்படி எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், அதன் உரிமையாளரை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று மணி அரோராவை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

