ADDED : செப் 09, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், 'ஏ' டிவிஷன் வாலிபால் லீக் சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் இன்று துவங்குகிறது.
இதில், நடப்பு சாம்பியனான எஸ்.ஆர்.எம்., பல்கலை, இந்தியன் வங்கி, வருமான வரி உட்பட எட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. போட்டிகள் 'ரவுண்ட் ராபின்' முறையில் நடக்கின்றன. முதலிடம் பிடிக்கும் அணிக்கு, 5 லட்சம் ரூபாயும், சிறந்த வீரருக்கு 25,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
அதேபோல், ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீரருக்கு தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட உள்ளது என, சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் அர்ஜுன் துரை தெரிவித்தார்.