/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நன்மங்கலம் ஏரி பாதுகாக்க தன்னார்வலர்கள் ஆர்ப்பாட்டம்
/
நன்மங்கலம் ஏரி பாதுகாக்க தன்னார்வலர்கள் ஆர்ப்பாட்டம்
நன்மங்கலம் ஏரி பாதுகாக்க தன்னார்வலர்கள் ஆர்ப்பாட்டம்
நன்மங்கலம் ஏரி பாதுகாக்க தன்னார்வலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 02, 2024 02:13 AM

நன்மங்கலம்:மேடவாக்கம் அடுத்த நன்மங்கலத்தில், 100 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது. 15 ஆண்டுகளாக துார் வாரப்படாததால் ஆகாயத்தாமரை, முள் செடிகள் வளர்ந்துள்ளன. குப்பை கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகின்றன.
தவிர, ஏரியின் போக்கு கால்வாய் முழுதும் ஆக்கிரமிக்கப்பட்டு, உபரி நீர் செல்ல வழியில்லை.
இதனால், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து, பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
எனவே, ஏரியை துார் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போக்கு கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் கோரி, நீர்நிலை புனரமைப்பு சங்கம், ஏரி மறு சீரமைப்பு கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் நேற்று, நன்மங்கலம் ஏரியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போலீசார் வந்து பேச்சு நடத்திய பின், அனைவரும் கலைந்து சென்றனர்.