/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணப் பட்டுவாடா இல்லாத இடங்களில் ஓட்டுப்பதிவு குறைவு
/
பணப் பட்டுவாடா இல்லாத இடங்களில் ஓட்டுப்பதிவு குறைவு
பணப் பட்டுவாடா இல்லாத இடங்களில் ஓட்டுப்பதிவு குறைவு
பணப் பட்டுவாடா இல்லாத இடங்களில் ஓட்டுப்பதிவு குறைவு
ADDED : ஏப் 21, 2024 12:07 AM
சென்னை, தென்சென்னை தொகுதியில், 2014, 2019 லோக்சபா மற்றும் சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு பணம் வழங்கினர்.
இதற்காக, இரவில் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. வழக்குப்பதிவும் நடந்தது. இந்த தேர்தலில், பணப் பட்டுவாடா நடைபெறவில்லை. மின்தடை மற்றும் வழக்குப்பதிவு போன்ற சம்பவங்களும் நடக்கவில்லை.
ஓட்டுக்கு பணம் வாங்கி பழக்கப்பட்ட பலர், இந்த தேர்தலில் ஓட்டு போடாத சம்பவங்களும் நடந்துள்ளன.
குறிப்பாக, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் கடந்த தேர்தல்களை விட ஓட்டு குறைவாக பதிவாகியுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதாவது:
பல ஓட்டு சாவடிகளில் கடந்த தேர்தல்களை போல் கூட்டம் இல்லை. இதுவரை ஓட்டு போட்ட ஏழை, நடுத்தர மக்களில் சிலர் ஓட்டு போடவில்லை என தெரிந்தது. கட்சிக்காரர்களிடம் கேட்டபோது, 'பணம் வழங்காததால், ஓட்டு போட வரவில்லை' என்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

