/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜாக்கி மூலம் 8 அடி உயர்த்தப்படும் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில்
/
ஜாக்கி மூலம் 8 அடி உயர்த்தப்படும் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில்
ஜாக்கி மூலம் 8 அடி உயர்த்தப்படும் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில்
ஜாக்கி மூலம் 8 அடி உயர்த்தப்படும் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில்
ADDED : மே 09, 2024 12:22 AM
வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடியில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொன்மையான ரவீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவில், சூரிய பகவான் வருகை புரிந்து சிவபெருமானை வணங்கியதால், மூலவரான சிவபெருமான் ரவீஸ்வரர் என பெயர் பெற்றார்.
கோரிக்கை
ரவி என்றால் சூரியன் என்று பொருள். வேதங்களை இயற்றிய வேதவியாசர் வழிபட்ட தலம் இது. எனவே இத்தலம் அவர் பெயரால் வியாசர்பாடி என பெயர் பெற்றது.
இக்கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் வரை சூரியன் கதிர்கள் ராஜகோபுரம் வழியாக நுழைந்து மூலவர் மீது படும். தற்போது கோவில் சன்னதி, 5 அடி கீழே இறங்கியதால், சூரிய ஒளி கதிர்கள் செங்குத்தாக விழும் மாதங்களில் மட்டும் மூலவர் மீது படுகிறது.
கோவில் இறங்கியதால், மழை காலங்களில் 5 அடிவரை மழைநீர் தேங்கி நிற்கிறது.
தற்போது கோவில் மூலவர், அம்மன், மகாமண்டபம், நந்தி, கொடிமரம், சண்டிக்கேஸ்வரர், ராஜகோபுரம் ஆகிய சன்னதிகள் தரைதளத்தை விட, 5 அடி பள்ளத்தில் உள்ளதால் சன்னதிகளை ஜாக்கி உதவியுடன் உயர்த்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கான பணிகளை ஹிந்து சமய அறநிலையத் துறை மேற்கொள்ள உள்ளது.
இப்பணி குறித்த விவரங்களை இக்கோவிலில் நேற்று பணிகளை பார்வையிட்டு, விவரங்களை ஹிந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார்.
மின்விளக்கு வசதி
வியாசர்பாடி, மூர்த்திங்கர் தெருவில் உள்ள கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தை 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி, 90 லட்ச ரூபாய் செலவில் கோவில் குளத்தில் 12 அடியில் சுற்றுச்சுவர்கள் அமைக்கும் பணி, குளத்தை சுற்றி பாதை, மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இப்பணிகளையும் அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். அறநிலைத்துறை இணை ஆணையர் முல்லை, கோவில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.