/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தைகளுடன் பிச்சை பெண்களுக்கு எச்சரிக்கை
/
குழந்தைகளுடன் பிச்சை பெண்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 14, 2024 12:27 AM
மயிலாப்பூர், மயிலாப்பூர், கச்சேரி சாலையில் நேற்று முன்தினம், மூன்று பெண்கள் கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
இதில், மூவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, மூவரையும் கச்சேரி சாலையில் உள்ள மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ஆனால், மூவரிடமும் கைக்குழந்தை இருப்பதால், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு விசாரணையில், அவர்களது குழந்தைகள் தான் என்பதற்கான சான்று வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளை, குழந்தைகள் நலக்குழுவினர் பெற்றோரிடம் ஒப்படைத்ததுடன், முறையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர். மேலும், ஒவ்வொரு வார திங்கட்கிழமையும் 'குழந்தைகளை தங்களிடம் காட்ட வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளனர்.