/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூன்று மடங்கு வேகத்தில் குழாய்களில் நீர்வரத்து
/
மூன்று மடங்கு வேகத்தில் குழாய்களில் நீர்வரத்து
ADDED : செப் 04, 2024 01:07 AM
புழுதிவாக்கம்,:
பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம் ராமலிங்கா நகர் பிரதான சாலையில், மழைநீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, அந்த இடத்தில் ஏற்கனவே நிலத்திற்கடியில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் சேதமடைந்தன.
இதனால், குடிநீருடன் கழிவுநீர் கலந்து, கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்ததால், பகுதிமக்கள் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பல இடங்களில் குழாய் இணைப்புகளில் பொருத்தப்பட்டிருந்த வால்வு பகுதியில், நீர்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த மூன்று நாட்களில், அனைத்து வால்வும் முழுதாக சீரமைக்கப்பட்டது. நேற்று முதல் மூன்று மடங்கு வேகத்தில் தாராளமாக தண்ணீர் வந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.