/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணேசபுரம் மேம்பால பணி குழாய் உடைந்து தண்ணீர் வீண்
/
கணேசபுரம் மேம்பால பணி குழாய் உடைந்து தண்ணீர் வீண்
ADDED : மார் 05, 2025 02:39 AM

வியாசர்பாடி:வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரி நெடுஞ்சாலையில், ஜீவா ரயில் நிலையம் அருகே கணேசபுரம் சுரங்கப்பாதை உள்ளது.
ஆண்டுதோறும், மழைக்காலத்தில் வியாசர்பாடி, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், கணேசபுரம் சுரங்கப்பாதையில் தேங்கி, போக்குவரத்து தடைபடுவது வாடிக்கை. வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல், மாற்றுப்பாதையில் செல்வது தொடர்கதையானது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 226 கோடி ரூபாய் மதிப்பீடில் மேம்பால கட்டுமான பணி நடக்கிறது. 600 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்திலும் மேம்பாலம் கட்டப்படுகிறது.
இதற்காக, குடிநீர், கழிவுநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இப்பணியின்போது, உடைப்பு ஏற்பட்டு, கணேசபுரம் மேம்பாலத்தில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் இருந்து, தொற்று நோய்கள் பரவும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.