/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சடையங்குப்பம் பர்மா நகரில் குடிநீர் பற்றாக்குறை
/
சடையங்குப்பம் பர்மா நகரில் குடிநீர் பற்றாக்குறை
ADDED : ஜூன் 04, 2024 12:36 AM
மணலி,
மணலி மண்டலம், 16 வார்டு, சடையங்குப்பம், பர்மா நகரில்,1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்குள்ள குடியிருப்புகளுக்கு, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், குழாய், தண்ணீர் தொட்டி, லாரிகள் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
சில மாதங்களாக குடிநீர் வினியோகத்தில் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக, குழாய்களில் குடிநீர் வரவை எதிர்பார்த்து, குடங்கள் அதிகளவில் காத்துக்கிடக்கின்றன. இதனால், பணம் கொடுத்து கேன் குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து, குடிநீர்வாரிய அதிகாரிகளிடம்புகார் தெரிவித்தாலும்,குடிநீர் மொத்த வினியோகிப்பே குறைவு என, சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கவனித்து, போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.