ADDED : ஜூலை 02, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், அயனாவரம் மகளிர் போலீசில், நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், வினோத் என்ற நபரை கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்தேன். கடந்த ஏப்., 23ம் தேதி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால், கர்ப்பமானேன். வினோத்திடம் கூறிய போது, தனக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு பெண் குழந்தை இருப்பதாக தெரிவித்தார்.
திருமணத்தை மறைத்து என்னிடம் பழகி ஏமாற்றிய வினோத் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அயனாவரம் போலீசார் வழக்கு பதிந்து, வினோத்தை தேடி வருகின்றனர்.