/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீவுத்திடலில் களைகட்டும் 'மிஸ்ரி வேர்ல்ட்' பொருட்காட்சி
/
தீவுத்திடலில் களைகட்டும் 'மிஸ்ரி வேர்ல்ட்' பொருட்காட்சி
தீவுத்திடலில் களைகட்டும் 'மிஸ்ரி வேர்ல்ட்' பொருட்காட்சி
தீவுத்திடலில் களைகட்டும் 'மிஸ்ரி வேர்ல்ட்' பொருட்காட்சி
ADDED : ஜூலை 04, 2024 12:38 AM

சென்னை, தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறை அனுமதியுடன் சென்னை தீவுத்திடலில், 'மிஸ்ரி குரூப் ஆப் கம்பெனி' சார்பில், 'மிஸ்ரி வேர்ல்ட்' கோடை பொருட்காட்சி, ஜூன் 4ம் தேதி துவங்கியது.
வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11:00 முதல் இரவு 11:00 மணி வரையிலும் நடக்கிறது.
இந்த பொருட்காட்சியில், நாட்டிலேயே முதல்முறையாக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, 'லைவ் அவதார்' கண்காட்சி, தங்க புதையல் வீடு, 'டிஸ்னி வேர்ல்ட்' போன்றவை இடம்பெற்றுள்ளன.
மேலும், அரண்மனை - 4 பேய் வீடு, பனிக்கட்டி வீடு, 'பன் சிட்டி கேம்' என, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. 50க்கும் மேற்பட்ட, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான அரங்கங்களும், ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.