/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பளு துாக்கும் போட்டி மாற்றுத்திறன் பெண் அசத்தல்
/
பளு துாக்கும் போட்டி மாற்றுத்திறன் பெண் அசத்தல்
ADDED : மார் 10, 2025 12:24 AM

சென்னை, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு பளு துாக்கும் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான பளு துாக்கும் போட்டி, அம்பத்துார்,நாதெல்லா வித்யோதயா பள்ளியில் நேற்று நடந்தது.
பெண்கள் மட்டுமே பங்கேற்ற இப்போட்டியில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர்கள் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட், ஸ்குவாட், கிளாசிங் பவர் லிப்டிங் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மாவட்டம் முழுதும் இருந்து, 200க்கும் மேற்பட்ட வீராங்கனையர் ஆர்வத்துடன் பங்கேற்ற நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில், அம்பத்துாரைச் சேர்ந்த ஸ்வேதா, 23, என்ற பெண் மட்டும் பங்கேற்றார்.
இவர், ஸ்குவாட் பிரிவில், 45 கி., டெட்லிப்ட் பிரிவில் 50 கி., பென்ஞ் பிரஸ் பிரிவில் 30 கி., என, மொத்தம் 125 கி., எடை துாக்கி, முதல் பரிசு பெற்று அசத்தினார்.