/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பசியால் மயங்கி விழுந்த மேற்கு வங்க தொழிலாளர்கள் ரயில்வே போலீசார் உதவிக்கரம்
/
பசியால் மயங்கி விழுந்த மேற்கு வங்க தொழிலாளர்கள் ரயில்வே போலீசார் உதவிக்கரம்
பசியால் மயங்கி விழுந்த மேற்கு வங்க தொழிலாளர்கள் ரயில்வே போலீசார் உதவிக்கரம்
பசியால் மயங்கி விழுந்த மேற்கு வங்க தொழிலாளர்கள் ரயில்வே போலீசார் உதவிக்கரம்
ADDED : செப் 17, 2024 12:46 AM

சென்னை, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சமர்கான், 35. மானிக்கோரி, 50, சத்யபண்டிட், 42, அசித் பண்டிட், 47, கோனாஸ் மித்தா, 52. இவர்கள் உட்பட 11 பேர், கடந்த வாரம் கூலி வேலைக்காக, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு வந்தனர்.
அங்கு மூன்று நாட்கள் தங்கி வேலை தேடியுள்ளனர்; போதிய வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து, சொந்த ஊருக்கு செல்ல முடிவுசெய்து, இரண்டு நாட்களுக்கு முன், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். வெறும் டீ, காபி குடித்து சென்ட்ரலில் தங்கி உள்ளனர்.
போதிய உணவு உட்கொள்ளாததால், இரண்டு பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். ஐந்து பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த ரயில்வே போலீசார், தனியார் மருத்துவமனை உதவியுடன் அவர்களுக்கு முதலுதவி அளித்தனர்.
தொடர்ந்து, '108' ஆம்புலன்ஸ் உதவியுடன் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., சரளா உணவு பொட்டலங்கள் வழங்கினார்.
இது குறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது:
சென்ட்ரலில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்த ஐந்து பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இவர்களில் ஒருவர் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. சிகிச்சைக்கு பின், அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது. மற்றவர்களும் தேறி வருகின்றனர்.
மீதமுள்ளவர்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் முழுமையாக உடல்நிலை தேறிய பின், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.