/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வெஸ்ட் மின்ஸ்டர்' குடியிருப்பு பாதிப்பு கணக்கெடுக்க குழு
/
'வெஸ்ட் மின்ஸ்டர்' குடியிருப்பு பாதிப்பு கணக்கெடுக்க குழு
'வெஸ்ட் மின்ஸ்டர்' குடியிருப்பு பாதிப்பு கணக்கெடுக்க குழு
'வெஸ்ட் மின்ஸ்டர்' குடியிருப்பு பாதிப்பு கணக்கெடுக்க குழு
ADDED : செப் 10, 2024 12:29 AM
சென்னை,
சென்னை சாலிகிராமத்தில், 'ஜெயின் வெஸ்ட் மின்ஸ்டர்' என்ற பெயரில், 2015ல் 17 மாடி கட்டடத்தில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டன.
தரமற்ற கட்டுமான பொருட்களால், கட்டடத்தின் பல்வேறு தளங்களில் குறைபாடுகள் இருப்பதாக, வீடுகள் வாங்கிய உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர்.
பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை வெளியேற்றுதல், அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது போன்ற பணிகளை மேற்பார்வையிட, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும் கண்ணன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள்எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, 'வீட்டின் உரிமையாளர்கள், வீட்டினுள் பல வசதிகள், உள் அலங்காரங்களை செய்துள்ளனர். அதற்கான இழப்பீட்டையும் வழங்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பிளாட் உரிமையாளர்கள், கட்டடம் கட்டுபவர் மற்றும் நீதிபதிகள் குழு, பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தி, கட்டட புனரமைப்புப்பணியின்போது கூடுதல்தளப்பரப்பு குறியீட்டைப் பகிர்வது உள்ளிட்ட விஷயங்களில், ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும்.
பிளாட் உரிமையாளர்கள் சங்கம், கட்டடம் கட்டுபவர்அடங்கிய மூவர் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்பட்டுள்ள உள் அலங்காரங்கள், அதற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு செய்து பட்டியலை தயாரித்து, நீதிபதிகள் குழுவிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.