/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியை நாய் கடித்து குதறிய விவகாரம் உரிமையாளரின் நஷ்டஈடு வாக்குறுதி என்னாச்சு?
/
சிறுமியை நாய் கடித்து குதறிய விவகாரம் உரிமையாளரின் நஷ்டஈடு வாக்குறுதி என்னாச்சு?
சிறுமியை நாய் கடித்து குதறிய விவகாரம் உரிமையாளரின் நஷ்டஈடு வாக்குறுதி என்னாச்சு?
சிறுமியை நாய் கடித்து குதறிய விவகாரம் உரிமையாளரின் நஷ்டஈடு வாக்குறுதி என்னாச்சு?
ADDED : மே 14, 2024 12:59 AM
சென்னை 'நாய் கடிக்கு சிகிச்சை பெறும் பேத்திக்கு, நாய் உரிமையாளர் உறுதியளித்தபடி, 15 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவோம்' என, அச்சிறுமியின் பாட்டி தெரிவித்துள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில், ரகு என்பவர் காவலாளியாகவும், பராமரிப்பாளராகவும் உள்ளார். அவரது, 5 வயது மகள் சுரக் ஷா, பூங்காவில் விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்வீட்டை சேர்ந்த புகழேந்தி என்பவரின் இரண்டு நாய்கள் சிறுமியை கடித்து குதறியன.
இதில், பலத்த காயமடைந்த சிறுமிக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 9ம் தேதி ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாய்களின் உரிமையாளர் வாக்குறுதி அளித்தபடி, '15 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்வோம்' என, உறவினர்கள் கூறினர்.
சிறுமியின் பாட்டி தனலட்சுமி கூறியதாவது:
பேத்தி நலமாக உள்ளார். வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என, டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், உடல் முழுதும் நாய் கடித்துள்ளது. வீட்டிற்கு அழைத்து சென்று பின்னாளில், ஏதேனும் பாதிப்பு வந்தால் யார் பார்ப்பது. மாதம், 15,000 ரூபாய் சம்பளத்தில் தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம்.
எனவே, சிறுமியின் பாதுகாப்பு கருதி, நாய்களின் உரிமையாளர் வாக்குறுதி அளித்தபடி, 15 லட்சம் ரூபாயை, சுரக் ஷாவின் வங்கி கணக்கில், 'டெபாசிட்' செய்ய வேண்டும்.
அப்போது தான், நாங்கள் டிஸ்சார்ஜ் செய்வோம். தற்போது வரை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், எங்களை நல்ல முறையில் கவனித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் உதவணும்
என் குழந்தையை 'டிஸ்சார்ஜ்' செய்துவிட்டால், வெயில் தான் தங்க வேண்டியிருக்கும். என் வீட்டில் மின்விசிறிகூட இல்லை. எனவே, தமிழக முதல்வர் என் குழந்தைக்கு உதவ வேண்டும். குழந்தை வளரும் வரை, அவருக்கான உதவியை, தமிழக அரசும், நாயின் உரிமையாளரும் செய்ய வேண்டும். எனக்கு பணமாக எதையும் தர வேண்டாம். குழந்தைக்கு பின்வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை கருதி, உதவ முன்வர வேண்டும்.
- சிறுமியின் தந்தை ரகு

