/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மாஜி' எம்.பி., மகன் வீட்டிற்கு சீல் வைத்தது யார்?
/
'மாஜி' எம்.பி., மகன் வீட்டிற்கு சீல் வைத்தது யார்?
'மாஜி' எம்.பி., மகன் வீட்டிற்கு சீல் வைத்தது யார்?
'மாஜி' எம்.பி., மகன் வீட்டிற்கு சீல் வைத்தது யார்?
ADDED : ஆக 09, 2024 12:36 AM

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,அடைக்கலராஜ் மகன் வீட்டிற்கு, நுங்கம்பாக்கத்தில் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக, எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையைச் சேர்ந்தவர் தர்மன், 32. அவர் எழும்பூர் பாந்தியன் சாலை பார்சன் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி., அடைக்கலராஜின் மகன் வின்சென்ட் வீட்டை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக சென்றார். அப்போது வீட்டின் கதவில் சீல் வைக்கப்பட்டு, நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
இதுகுறித்து உரிமையாளர் வின்சென்ட்டிடம் மொபைல்போனில் தர்மன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று வின்சென்ட்டின் மேனேஜர் கோபாலகிருஷ்ணன், பராமரிப்பாளர் தர்மன், வழக்கறிஞருடன் சென்று எழும்பூர் காவல் நிலையத்தில், 'யாரோ வீட்டில் சீல் வைத்துள்ளனர்' என்று புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
- நமது நிருபர் -