/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கவர்னர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? பள்ளி விழாவில் தமிழிசை விளக்கம்
/
கவர்னர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? பள்ளி விழாவில் தமிழிசை விளக்கம்
கவர்னர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? பள்ளி விழாவில் தமிழிசை விளக்கம்
கவர்னர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? பள்ளி விழாவில் தமிழிசை விளக்கம்
ADDED : ஜூலை 16, 2024 12:36 AM
திருவொற்றியூர், காமராஜர் போல், மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன், என, தமிழிசை பேசினார்.
மணலி, சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர், 122வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தெலுங்கானா - புதுச்சேரி முன்னாள் துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :
மாணவர்கள், மொபைல் போன், ரீல்ஸ், தொலைக்காட்சிகளில் சீரியல் அதிகம் பார்த்து நேரத்தை வீணடிக்கக்கூடாது. அதே சமயம், மகிழ்ச்சியையும் தொலைத்து விடக் கூடாது.
காமராஜர் போல மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, கவர்னர் பதவியை ராஜினாமா செய்து, அரசியலுக்கு வந்துள்ளேன்.
நாம் என்னவாக வேண்டும் என, மனதில் வைத்து படித்தால், நிச்சயம் லட்சியத்தை அடைய முடியும். பெண்களுக்கு அரசியல் சாதாரணம் கிடையாது. தடைகள் தாண்டி, அதிகமான உழைப்பை கொடுத்து சாதிக்க வேண்டும்.
பெண்கள் அரசியலுக்கு வந்தால், பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். என்னை கூட உயரம், நிறத்தை வைத்து, பலர் கிண்டல் செய்கின்றனர். நான் உயரம் குறைவானவள் என்றாலும், திறமையால் உயர்ந்து விட்டேன்.
நான், ஊழலற்ற துாய்மையான அரசியல்வாதி. பெண்கள் அரசியலில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளேன். அரசியலை பார்த்து, பெண்கள் பயப்படக் கூடாது. நேரடியாக களம் கண்டு, மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.

