/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முகலிவாக்கம் பிரதான சாலைகள் போக்குவரத்திற்கு ஏற்ப மாறுமா?
/
முகலிவாக்கம் பிரதான சாலைகள் போக்குவரத்திற்கு ஏற்ப மாறுமா?
முகலிவாக்கம் பிரதான சாலைகள் போக்குவரத்திற்கு ஏற்ப மாறுமா?
முகலிவாக்கம் பிரதான சாலைகள் போக்குவரத்திற்கு ஏற்ப மாறுமா?
ADDED : ஜூன் 28, 2024 12:22 AM

சென்னை மாநகராட்சி, முகலிவாக்கம் பகுதியில்பாதாள சாக்கடை திட்ட பணிகள், 80 கோடி ரூபாயில் 2019ல், குடிநீர் வாரியம் சார்பில் துவங்கப்பட்டது. 50 கி.மீ., துாரம் கழிவுநீர் குழாய், 7,300 மீ., துாரத்திற்கு விசைக்குழாய், 2128 இயந்திர நுழைவுகள் அமைக்கப்படுகின்றன.
இத்திட்டத்திற்காக, முகலிவாக்கத்தின் பல பகுதிகளில் சாலை தோண்டப்பட்டது. 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
இதில், வாகன போக்குவரத்து நிறைந்த ஏ.ஜி.எஸ்., காலனி பிரதான சாலை, குமுதம்நகர், மணப்பாக்கம் -- முகலிவாக்கம் பிரதானசாலை, எஸ்.எஸ்.கோவில், மதனந்தபுரம் சாலைகளில் பாதாள சாக்கடை திட்ட பணி முடிந்தும், சாலையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளது.
இதனால், முகலிவாக்கத்தில் சாலை படுமோசமாகி குண்டும் குழியுமாக இருக்கிறது. இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இந்நிலையில், அடிக்கடி மழை பெய்து வருவதால், சகதி சாலையாக மாறி, வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடித்த பிரதான சாலைகளில், போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-- நமது நிருபர் --